Deva Sabayinilae Devan தேவ சபையினிலே தேவன்
தேவ சபையினிலே தேவன்
எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே
பரன் இயேசு உலாவுகிறார்
1. பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில்
ஏந்தியே துதிப்போம் - தேவ
2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம்
அடைக்கலமே - தேவ
3. இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக
தாங்கி ஆதரிப்பார் - தேவ
4. உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும்
நாமத்தோரிவர் - தேவ
5. சாத்தானின் கோட்டை தகர்ந்தொழிய
ஏகமாய்த் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு
நமக்குண்டே - தேவ
6. ஓசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம்
முழங்கிடுவோம் - தேவ