தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
Dhagamullavan mael Thanneerai
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை
ஊற்றுவேன் என்றீர்
ஊற்றம் ஐயா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன் - நான்
1. மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே
2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே
3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்
4. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்
5. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும்
6. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே