En Vazhvu Ullavarai என் வாழ்வு உள்ளவரை
என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன்
என் இறுதி மூச்சு வரை உம்மையே போற்றுவேன் - (2)
1) பெயர் சொல்லி அழைத்தீரே
கருவில் என்னைத் தெரிந்தீரே - (2)
உம் அன்பால் நிறைத்தீரே
உம் தயவால் இரட்சித்தீரே - (2) - என் வாழ்வு
2) மறவாமல் நடத்தினீரே
தேவைகளை சந்தித்தீரே - (2)
பாசத்தைப் பொழிந்தீரே
பரிவோடு காத்தீரே - (2) - என் வாழ்வு
3) புது வாழ்வு தந்தீரே
வழுவாமல் காத்தீரே - (2)
உன்னதத்தில் உயர்த்தினீரே
உம் கிருபை பொழிந்தீரே - (2) - உன் வாழ்வு