என் ஆசையையெல்லாம்
En Aasaiyellam
என் ஆசையையெல்லாம் அன்பர் இயேசுவாக 
மாறும் வேளையிலே இன்பம் பொங்கு தய்யா
என் பாசமலரே என் நேச உயிரே
என் ஆசையெல்லாம் நீர் தானே
என் ஆசையெல்லாம் நீர் தானே-!
1) திராட் சை ரசத்திலும் மதுரம் 
கிச்சிலி பழங்களிலும் இன்பம் 
நேசத்தால் சோகமடைந்தேனே
ஆற்றிடும் தேற்றிடுமே - நாதா ஆற்றிடும் தேற்றிடுமே - என் ஆசை 
2) மாதளம் ரசத்திலும் இனிமை 
தூதாயீம் பழங்களிலும் புதுமை 
அக்கினி ஜுவாலை போன்ற அன்பு 
வெள்ளங்கள் தணிக்க முடியாது - அன்பே
வெள்ளங்கள் தணிக்க முடியாது - என் ஆசை 
3) பரிமளத் தைலத்திலும் வாசனை 
முத்திரை மோதிரத்திலும் வலிமை 
மரணம் போல் வலிய உந்தன் நேசம் 
தண்ணீர்கள் அவிக்க முடியாது - நாதா 
தண்ணீர்கள் அவிக்க முடியாது - என் ஆசை 
4) தேன்கூட்டு தேனைப் போல சுவைப்பேன் 
துயதான பாலை போல பருகுவேன் 
உந்தன் அன்பை பருகி மகிழ்ந்தேனே 
இதயத்தைக் கவர்ந்து கொண்டீரே - என் அன்பே 
இதயத்தைக் கவர்ந்து கொண்டீரே - என் ஆசை 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter