இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
Isravelin Thuthigalil
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்
ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர்
இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே
நீர் மாத்ரமே என் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்.
எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்
ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர்
செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்
யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து
எம்மை நடத்தி வந்தீர்
எதிரியின் படை எம்மை சூழும்போது
ஒங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter