• waytochurch.com logo
Song # 14819

ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

Iya Neeranu Anna Kaybavin


ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
நையவே பட்டபாடு ஏசையாவே
கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ
கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே

திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க
இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே
பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க
அருமைப் பொருளதான ஏசையாவே

முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ
எள்ளளவும் பேசாத ஏசையாவே
கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே

கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவே
சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
சாடிக் கன்னத்தறைய ஏசையாவே

பொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய
புண்ணியன் நீர் கலங்க ஏசையாவே
அண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
அடியேனைக் காத்தருளும் ஏசையாவே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com