இந்நாளில் இயேசுநாதர்
Innaalil Yesu Nathar
இந்நாளில் இயேசுநாதர்
உயிர்த்தார் கம்பீரமாய் -இகல்
அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம்
போர் சேவர் சமாதி
சூழ்ந்து காவிலிருக்க
புகழார்ந்தெழுந்தனர் தூதன்
வந்து கல்முடி பிரிக்க
அதிகாலையில் சீமோனோடு
யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர்
இவர் ஆய்ந்து தேடிட
பரிசுத்தனை அழிவுகாண
வொட்டீர் என்று முன்
பகர் வேத சொற்படி
பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
இவ்வண்ணமாய் பரன் செயலை
எண்ணி நாடுவோம் எல்லோருமே
களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்