ஐயையா நான் ஒரு மா பாவி
Iya Iya Naan Oru Maa Pavi
ஐயையா நான் ஒரு மா பாவி என்னை
ஆண்டு நடத்துவீர் தேவாவி
மெய் ஐயா இது தருணம் ஐயா என்றன்
மீதிலிரங்கச் சமயம் ஐயா
ஐயையா இப்போ தென்மேல் இரங்கி வெகு
அவசியம் வரவேணும் தேவாவி
எனதிருதயம் பாழ்நிலமாம் ஏழை
என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
தினமும் வந்து வழிநடத்தும் ஞான
தீபமே உன்னத தேவாவி
ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் தினம்
அருவருத்து நான் தள்ளுதற்கு
வாகான சுத்த மனம் தருவீர் நீர்
வல்லவராகிய தேவாவி
பத்தியின் பாதை விலகாமல் கெட்ட
பாவத்தில் ஆசைகள் வையாமல்
சத்திய வேதப்படி நடக்க என்னைத்
தாங்கி நடத்திடும் தேவாவி
அன்பு பொறுமை நற் சந்தோஷம் என்
ஆண்டவரின் மேல் விசுவாசம்
இன்ப மிகு மெய்ச் சமாதனம் இவை
யாவும் தருவீரே தேவாவி
ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து அவர்
இடத்திலேயே நம்பிக்கை வைக்க
மாசில்லாத் துய்யனே வந்துதவும் நீர்
வராமல் தீராதே தேவாவி