• waytochurch.com logo
Song # 14824

இயேசு நாமம் உயர்த்திடுவோம்

Yesu Namam Uyarthiduvom


இயேசு நாமம் உயர்த்திடுவோம்
இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்
மனதின் பாரம் நீக்கிடுமே
மாறாத இயேசு நாமமிதே

அற்புத அடையாளம் நடந்திடும்
அதிசயங்கள் பல புரிந்திடும்
நோய்ககும் போய்களும்
விரட்டி ஓட்டிடும் நாமமிதே

இரட்சண்யம் அளித்திடும் நாமமே
இரட்சகர் இயேசுவின் நாமமே
பாவங்கள் போக்கிடும்
பரமன் இயேசுவின் நாமமிதே

நேற்றும் இன்றும் மாறிடா
நேசர் இயேசுவின் நாமமே
தேனிலும் இனிமையாய்
தேவன் இயேசுவின் நாமமிதே

இருளின் பயங்கள் நீக்கிடும்
இனிமை வாழ்வினில் தங்கிடும்
மகிழ்ச்சியும் தந்திடும்
மகிபன் இயேசுவின் நாமமிதே

இயேசுவின் நாமம் பரிசுத்தம்
நாவுகள் யாவும் துதித்திடும்
உயர்ந்தது சிறந்ததே
உன்னதர் இயேசுவின் நாமமிதே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com