இன்ப இயேசுவின் இணையில்லா
Inba Yesuvin Inaiyilla
இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்
நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் - என்னையும்
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்
பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்
மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் - என்
ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
வானிலும் இந்தப் பூமிலும் நீர் - என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே
ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உளம் கனிந்தே
அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
அல்லேலூயா துதி கன மகிமை - உம்
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter