இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்
Inaiilla Namam Yesuvin
இணையில்லா நாமம் இயேசுவின் நாமம்
இன்பமே தங்கும் இதயமே பொங்கும்
இன்னல்கள் தீரும் என் மனம் மாறும்
பாவத்தின் கூரை முறித்திடும் நாமம்
பாடுகள் ஏற்ற இயேசுவின் நாமம்
சாபப்பிசாசை ஜெயித்தவர் னாமம்
சந்தம் ஓங்கிடும் நாமம்
லோகத்தின் ஆசை வெறுத்திடும் நாமம்
கோகத்தை மீட்கும் இயேசுவின் நாமம்
ஜீவனைக் கொடுத்த இரட்சகர் நாமம்
ஜீவனோடெழுந்தவர் நாமம்
அதை யார் மறைத்திடுவார் மனுக்குல விளக்கே
அணைந்திடா ஒளி திருனாமம்
அண்டிடுவோரை அணைத்திடும் நாமம்
அன்பின் சொருபி இயேசுவின் நாமம்
வேண்டுதல் கேட்கும் வல்லவர் நாமம்
வேதனை தாங்கிடும் நாமம்
இதை நம்பியே வாரும் பாவங்கள் தீரும்
இன்றும்மை அழைத்திடும் நாமம்
அழியாமை ஜீவன் அளித்திடும் நாமம்
அற்புதம் செய்யும் இயேசுவின் நாமம்
விண்ணுலகினிலே சேர்த்திடும் நாமம்
மண்ணுலகோர் நம்பும் நாமம்
மிகச்சீக்கிரம் வருவேன் என்றும் வாக்குரைத்த
மீட்பர் நல் மேய்ப்பரின் நாமம்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter