இது கிருபையின் நாட்களல்லவா
Ithu Kirubaiyin Naatkalallavaa
இது கிருபையின் நாட்களல்லவா
நம் அறுவடை நேரமல்லவா
தேவனின் சேவையில் முன்னணியில் நின்று
தீவிரமாய் நாம் செயல்படுவோம்
பின்மாரி மழைக்காக
ஊக்கமாய் ஜெயித்திடுவோம்
நம் தேசத்தின் ஜனங்களுக்காய்
திறப்பினில் நின்றிடுவோம்
கர்த்தரின் தோட்டத்திலே
கவனமாய் பணி செய்வோம்
வேலியை செப்பனிடுவோம்
மந்தையைக் காத்துக் கொள்வோம்
அறுவடைக் காலத்திலே
நாம் நித்திரை செய்யலாமா?
சத்துரு எழும்பும் முன்னே
நாம் தீவிரம் அடைந்திடுவோம்
கனிதரும் மரங்களாக
நாம் செழித்து வளருவோம்
நம் நேசர் வரும் போது
நல்ல கனிகளைத் தந்திடுவோம்