Nallavaru nallavaru yesappaa nallavaru நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பெலனில்லாம நடந்தேன் - கைய
பிடிச்சு நடத்துனீங்க
ஒழுங்கில்லாம அலஞ்சேன் - என்ன
அடிச்சு திருத்துனீங்க
பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயல
நீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால
தொலஞ்சு போக பாத்தேன் - நல்ல
வழிய காட்டுனீங்க
அழிஞ்சு போக பாத்தேன் - உங்க
ஒளிய காட்டுனீங்க
அந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல
நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால
விருப்பம் போல வாழ்ந்தேன் - என்ன
விரும்பி அழச்சுட்டீங்க
வசனம் மறந்து வாழ்ந்தேன் - உங்க
வசமா இழுத்துட்டீங்க
தத்தி தத்தியே நடந்து திரிஞ்ச பயல
நீங்க சுத்தி சுத்தி வந்து பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால