நீரே வழி நீரே சத்தியம்
Neere vazhi neere sathyam
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யா
உமக்கு நிகர் என்றும் நீர் தானய்யா
கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லால் ஒர் சிற்பம் அல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானய்யா
ரூபங்கள் உமக்கில்லை சொரூபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே
உண்டானது எல்லாமே உம்மாலே உண்டானது
உம் நாமம் மகிமைக்கே உண்டாக்கினீர்
படைப்பு தெய்வம் அல்ல பார்ப்பதெல்லாம் தெய்வம் அல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா
எல்லாம் வல்ல தெய்வம் நீரே எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றும் இல்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதப்படி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter