Netru indru naalai Maaraadhavare நேற்று இன்று நாளை மாறாதவரே
நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே
வாக்குத்தத்தம் கொடுத்தால் - அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல - அவர்
கண்டதையும் சொல்ல
சொல்வதெல்லாம் உண்மை - அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது - அவர்
செய்கை புரியாது
தாழ்பாள்களை முறித்தார் - வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் - உன்னை
விடுவித்து காப்பார்
பாவம் நீங்கிப்போனதே - வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே - இன்றும்
அதைச் செய்வாரே