Naan Unakku Podhithu நான் உனக்கு போதித்து
நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன்- உனக்கு
ஈசாக்கு விதை விதைத்து
நூறு மடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் - அது போல்
ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே
ரெகோபோத் தொடங்கி விட்டது - உனக்கு
தேசத்தில் பலுகும்படி உனக்கு
இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு- இன்று முதல்
கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார்
என்று அநேகர் அறிந்து கொள்வார்கள்
இது முதல் அநேகர் அறிக்கை செய்வார்கள்