Nandriyodu Avar Vasal நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
துதியோடு பிரகாரம் வருவோம்
சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்
கர்த்தர் நல்லவர் - அவர்
கிருபை என்றென்றும் உள்ளது
எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்