Neengatha En Nesarae நீங்காத என் நேசரே
நீங்காத என் நேசரே
உம் நாமம் இன்பமே
என்றென்றும் பாடி மகிழ்ந்து
எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்
பெருவெள்ளம் மதிலை மோதுகையில்
பெருங்காற்றிலிருந்து பேசினீரே
எலியாவின் தேவனே என் தேவன்
எந்நாளும் உம்மை பின்ற்றுவேன்
துனபங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளை
தூய நல் ஆவியால் தேற்றினீரே
ஆவியின் வரங்கள் தந்தீரே
அல்லேலூயா என்று பாடிடுவேன்
ஆத்தும நேசரே உம் சாயலாய்
ஆவியில் என்றும் நான் வளர
ஆவியின் கனிகள் நிறைவாக
அன்பரே என்றும் தந்திடுமே