உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
Ummaiyallamal Enakku Yarundhu
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
என் இயேசய்யா அல்லேலுயா
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர் தானே
என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர் தானே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளும் ஐயா நீர் தானே