இயேசுவைப் போல் ஒரு தெய்வமில்லை
Yesuvai Pol Oru Theivam
இயேசுவைப் போல் ஒரு தெய்வமில்லை
இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை
மேலே உயரே உயரே இருந்தவரே
விழுந்த மனிதரை தூக்கிட வந்தவரே
இயேசுவே இயேசுவே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே - அதை
கண்டவர் உம்மைக் கண்டு வியந்தனரே
கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே
கடும் காற்றும் உம்மைக் கண்டு அடங்கினதே
லாசருவே நீ வா என்றதும் அன்று
மரித்தவன் உயிர் பெற்று நடந்தானே
உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே
அது ஜீவனை தந்திடும் நிச்சயமே
வாரால் அடித்து அறைந்தனரே
உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே
ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்
நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter