• waytochurch.com logo
Song # 14862

ஏன் மகனே (மகளே) இன்னும்

Yaen Maganae Innum


ஏன் மகனே (மகளே) இன்னும்
இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ?

கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2

நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய் -கரை

நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது
பயமில்லாத வாழ்வு உண்டு

படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் - உன்னைப்
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய

வழுவாமல் காத்திடுவார்
நீதிமானாய் நிறுத்திடுவார்
மகிமையுள்ள அவர் சமூகத்திலே
மகிழ்வோடு நிற்கச் செய்வார்

வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்
வழி குரல் கேட்கும்
கூப்பிடுதல் சத்தம் கேட்பார்
மனம் இரங்கி பதிலளிப்பார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com