இயேசு நாமம் உயர்ந்த நாமம்
Yesu Nammam
இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம்
மரணத்தின் வல்லமைகள்
தெறிப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
பாதாள சங்கிலிகள்
அறுப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்
மரணத்தை அவர் ஜெயித்திட்டார்
பாவத்தின் வல்லமைகள்
உடைபட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
வியாதியின் வல்லமைகள்
விலகியே போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
தடைசெய்த மதில்கள்
தளர்ந்து போய் விழுகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
எரிகோவின் வல்லமைகள்
பயந்துபோய் ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter