• waytochurch.com logo
Song # 14865

இயேசுவே உம்மைப்போலாக

Yesuve Ummai Polaga


இயேசுவே உம்மைப்போலாக
வாஞ்சிக்குதே என்னுள்ளம்

என் ஆவி ஆத்மா சரீரம்
முற்றும் படைத்து விட்டேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே

பாவமறியாது பாவமே செய்யாது
பாரினில் ஜீவித்தீரே
பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
பெலமதை தாருமையா - உந்தன்

உபத்திரவம் உண்டு உலகினில் என்று
உலகத்தை வென்றேனென்றீர்
உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே
பெலமதை தாருமையா - உந்தன்

சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
அல்ல என் சீஷன் என்றீர்
எந்தன் சிலுவையை நான் சுமக்க
பெலமதைத் தாருமையா - உந்தன்

தலைசாய்க்க தலமில்லை
தரணியில் உறவில்லை
நிலையில்லா பூவில் என்றீர்
நானும் உம்மைப் போல தியாகம் செய்ய
பெலமதைத் தாருமையா - உந்தன்

சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
தேவாட்டுக்குட்டி நீரே
சீயோனில் உம்முடன் நானிருக்க
உம்மைப் போல் மாற்றும் ஐயா - என்னை


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com