என் தேவனுக்காய் நான்
Yen Devanukai Naan
என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்
என் வாழ்க்கையிலே அவரே எல்லாம்
இன்பமோ துன்பமோ
கஷ்டமோ நஷ்டமோ
இயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன்
என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரே
எனக்காகவே தம் ஜீவன் ஈந்தார்
தாய் என்னை மறந்தாலும்
உற்றார் வெறுத்தாலும்
என்னை மறவாத தேவன் நீரே
உம் உள்ளங்கைகளில்
என்னையும் வரைந்துள்ளீர்
உயிர் உள்ள நாளெல்லாம்
என்னோடு இருக்கின்றீர்