இயேசு பாலனாய் பிறந்தார்
Yesu Balanai
இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லனை மீதிலே பிறந்தார்
உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியமும் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட
விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானுடவதாரமாய்
தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்
தம்மைப் பணிந்திடுவோம் வாரும்
ஓடி அலைந்திடும் பாவியை
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும்
கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும்
அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரைப் பணிவோம் வாரும்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter