என் எண்ணங்களை மாற்றும்
En ennangalai maatrum
என் எண்ணங்களை மாற்றும்
என் விருப்பங்களை மாற்றும்
என்னை உடைத்து என்னை வனைந்து 
என்னை புதிதாக்கும்
என்னை உடைத்து என்னை வனைந்து 
என்னை உமதாக்கும்
கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
எண்ணங்களை கட்ட முடியல 
நான் என்ன செய்வேனோ தெரியல
வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்
சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
சிற்றின்ப மாயை அதை நீக்குமே
பற்றோடு என்னை கண்ணோக்குமே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter