என் இதயம் யாருக்கத் தெரியும்
Ean Ithayam Yaarukku Therium
என் இதயம் யாருக்கத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக்கூடும்
நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே
சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ
வீசும் புயலில் படகும் தப்புமோ
மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ
அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ
ஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே
என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை அன் சோர்வுகள்
ஏசு என்னை தேற்றுவார்