• waytochurch.com logo
Song # 14876

எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவை

Ellam Yesuve


எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவை
தொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவை

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்

தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்

கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com