என் அருள்நாதா இயேசுவே
En Arul Natha Yesuve
என் அருள்நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்
என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்
கை தலை காலிலும் இதோ
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள்முடியும் ஒப்பற்றதே
சாரசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்
மாந்தர்க்கும் மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter