• waytochurch.com logo
Song # 14885

எல்லையற்ற அன்பினாலே

Ellaiyara Anbinale Ennai


எல்லையற்ற அன்பினாலே
என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்

துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன்
கெம்பீரிப்பேன் ஆ...அல்லேலூயா

நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
இதற்கீடாக நான் என்ன செய்வேன் -என்
ஜீவனை பலியாக படைக்கின்றேன் நான்

உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே
காணேன் உண்மையாய்
உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை

புழுதியினின்றெம்மை தூக்கியே மீட்டீர்
நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
என் சுயம் வெறுத்து
உந்தன் சித்தம் செய்வேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com