ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
En Intha Paduthan Swamy
ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
என்ன தருவேன் இதற் கீடுநான்
ஆனந்த நேமியே
எனை ஆளவந்த குரு சுவாமியே
கெத்சேமனேயிடம் ஏகவும் அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே மனம் நோகவும் சொல்
அளவில்லாத் துயரமாகவும்
முழந்தாள் படியிட்டுத் தாழவும் மும்
முறை முகம் தரைபடவீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும் கொடு
மரண வாதையினில் மூழ்கவும்
அப்பா பிதாவே என்றழைக்கவும் துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உம் சித்தம் என்று சாற்றவும் ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்
ஆத்துமத் துயர் மிக நீடவும் குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும் உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்