எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
Engu Pogireer Yesu Deivame
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை
சுமக்கும் தெய்வமே
பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர்
தீய சிந்தனை நான் நினைத்ததால்
உன் சிரசில் முள்முடி
நான் சூட்டினேன்
பெருமை கோபத்தால்
உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால்
உம் விலாவைக் குத்தினேனே
கசையால் அடித்தது என்
காம உணர்ச்சியால்
காறித்துப்பியது என்
பகைமை உணர்ச்சியால்
அசுத்த பேச்சுக்கள்
நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக்காடியை நான்
குடிக்கக் கொடுத்தேனே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter