Elunthar Iraivan Jeyame எழுந்தார் இறைவன் ஜெயமே
எழுந்தார் இறைவன் ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க
செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க
விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற
கருதிய காரியம் வாய்க்கத்- தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்
இரு திறத்தாறையும் சேர்க்க