Ejamananey En Yeshu Rajane எஜமானனே என் இயேசு ராஜனே
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே -என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன் ஐயா
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் நான்
அழைத்தீரே உம் சேவைக்கு என்னை
அதை நான் மறப்பேனோ
அப்பா உன் சந்நிதியில் தான்
அகமகிழ்ந்து களிகூருவேன் என்
எப்போது உம்மைக் காண்பேன் நான்
ஏங்குதய்யா என் இதயம்
என்தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்