• waytochurch.com logo
Song # 14897

எழுப்புதலே எங்கள் வாஞ்சை

Ezhuputhalea Engal Vaanjai


எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்

அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்து விட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும்

இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும்

எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் இயேசுவைக் காண வேண்டும்

எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com