எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
Engal Tharisanathai Engal
எங்கள் தரிசனத்தை எங்கள் ஊழியத்தில்
நிறைவேற்றிடும் ஆவியானவரே
தரிசனம் தந்தவரே... நிறைவேற்றிட உதவிடுமே...
நாங்கள் இழந்து போன உந்தன் வல்லமையை
திரும்பவும் தந்திடுமே
நாங்கள் மறந்து போன தரிசனத்தை
மீண்டும் புதுப்பித்திடும்
எங்கள் பார்வையை ஒரு விசை தெளிவாக்கிடும்
நோக்கத்தை நேராக்கிடும்
உந்தன் சித்தத்தை விட்டு விலகிடாமல்
காத்துக் கொள்ளும் தேவனே
எங்கள் சுய பலத்தை நம்பி தோற்றுப் போனோம்
அனுபவம் சார்ந்து கொண்டோம்
உந்தன் கிருபையை முற்றிலும் சார்ந்து கொண்டு
ஓடிட உதவிடுமே
நாங்கள் உண்மையுள்ளவர்களென்று நம்பி
தந்த இவ்வூழியத்தை
உண்மையாய் செய்திட வாஞ்சிக்கிறோம்
உந்தன் பலத்தால் நிரப்பிடுமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter