எனக்கொரு நேசர் உண்டு
Enakkoru Nesar Undu
எனக்கொரு நேசர் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடம் உண்டு
அவர்தான் இயேசு ராஜா
என் வேதனைகளை அவர் காண்கிறார்
என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்
ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார்
இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்
இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர்
என் அலைச்சல்களை அவர் அறிகிறார்
என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்
தாங்கி நடக்கவே பெலன் தருகிறார்
அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமே
பெலன் பெறுகவே சுகம் தருகிறார்