எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
Ethanai Naaval Thuthipen
எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்
நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பீரண சவரட்சணை செல்வம்
பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதை பலவீனம் பாராதருள் கோனே
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ
துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு