என் ஆத்ம நேசரும் நீரே
En Aathma Nesare
என் ஆத்ம நேசரும் நீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
என் பாவங்கள் என் சாபங்கள்
சிலுவையில் நீர் சுமந்தீரே
ஆராதனை ஆராதனை
அர்பணித்தேன் என்னையே
பெலவீன நேரத்தில் என்னை
பெலவானாய் மாற்றுகின்றீரே
என் சோதனையில் என் வேதனையில்
தாங்கினீர் உம் பெலத்தாலே
என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன்
உம் செயல்களை கண்டு வியந்தேன்
என் அடைக்கலமே அதிசயமே
அற்புத தேவனும் நீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter