எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
Enthan Jeba Velai
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம் பாதம் வந்தேன்
உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன்
நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா
நாளெல்லாம் பாதத்தில்
கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter