என் மீட்பரே என் இரட்சகா
En Meetpare En Ratsaka
என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே
துதிகளின் பாத்திரனே திருச்சித்தம்
போல்நடத்தி துர்ச்சன ப்ரவாகத்தில்
தேற்றினீர் போற்றுவேனே- சதி மோச
நாசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
சரணம் சரணம் மேசியாவே
தினம் தினம் உம் அருளால்
தீமைகள் வெல்லுவேன் நான்- கன
மகிமை யாவும் உமக்கே செலுத்திடுவேன்
உம்மாலே ஒருவனாக
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம்
வழி நடத்தும் மேசியாவே