என் இயேசுவே உம்மை அல்லால்
En Yesuve Ummai Allamal
என் இயேசுவே உம்மை அல்லால்
மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்
சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே
ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்
பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்
என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறியேன்
உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter