• waytochurch.com logo
Song # 14929

எனக்கொத்தாசை வரும் பர்வதம்

Enakoththaasai Varum Parvatham


எனக்கொத்தாசை வரும் பர்வதம்
நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்

வானம் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை
எந்நாளும் ஆறுதல் எனக்கவரே

என் காலைத் தள்ளாடவொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
ராப்பகல் உறங்காரே

வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்.


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com