En Paraloga Rajavukku என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
நான் ஒன்றுமில்லை
என்னை படைத்த என் தெய்வத்திற்கு
முன்பாக நான் ஒன்றுமில்லை
என்னை உருவாக்கின தெய்வமும்
இயேசு தான்- என்னை வாழ வைத்த
தெய்வமும் இயேசு தான்
என்னை இயக்குகின்ற தெய்வமும்
இயேசு தான் - என்னை நடத்துகின்ற
தெய்வமும் இயேசு தான்
என்னை தேடி வந்த தெய்வமும்
இயேசு தான்- என்னை உயர்த்தி
வைத்த தெய்வமும் இயேசு தான்
என்னை அபிஷேகித்த தெய்வமும்
இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
தெய்வமும் இயேசு தான்