என் தாயின் கருவிலே
En Thayin Karuvilae
என் தாயின் கருவிலே நான் உருவான
நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீர்
நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவை பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்
பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த
நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மைவிட்டு தூரம் சென்று
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட
நேரத்தில் துணையாய் தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் உம் மகன்
என்னை தேடி வந்தீரே
நான் மனதார நேசித்த மனிதர்கள்
மறந்தாலும் மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter