எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
Engum Pugal Yesu
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண்திறக்கவே
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?
சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கி
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்