என்னை சுமப்பதனால் இறைவா
Ennai Sumapathanal Iraiva
என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறியவில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறையவில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை
கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
மழைத்துளி சுமையில்லை
மழைத்துளி சுமையில்லை
அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
இதயம் சுமையில்லை

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter