En Athumave Kartharai என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
முழு உள்ளத்தோடே
அவர் நாமத்தையே ஸ்தோத்திரி
பரிசுத்தர் நீரே
நீர் செய்த சகல உபகாரங்களையும்
ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
உம்மையே நம்பி துதித்திடுவேன்
நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே - உம்
கிருபையினால் என்னை
உயர்த்தின தேவனே - வாழ்நாளெல்லாம்
உம்மை தொழுதிடுவேன்
பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்
நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
உம் முகத்தை மட்டும்
நோக்கி பார்த்திடுவேனே
சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்