எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
Enakai karuthuvar Ennai
எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
துன்ப நாளில் கைவிடாமல்
தம் சிறகின் நிழலில் மறைப்பார்
நம்புவதற்கே எனக்கென்றும்
சர்வ வல்லவர் கூட இருப்பார்
தளராமல் வனாந்திரத்தில்
பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடே
பொல்லாப்புகள் நேரிடாது
வாதையோ உன்னை அணுகாது
பாதைகளில் தேவனுடைய
தூதர்கள் கரங்களில் தாங்குவார்
இரவினிலே பயங்கரமும்
பகலிலே பறக்கும் அம்புகளுக்கும்
இருளிலே நடமாடும்
கொள்ளை நோய்களுக்கும்
நான் பயப்படேன்
செல்வேன் நான் இயேசுவுடன்
அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
தீர்காயுசால் திருப்தியாக்குவார்