• waytochurch.com logo
Song # 14951

என்னதான் ஆனாலென்ன

Ennathan Aanal Ena


என்னதான் ஆனாலென்ன
என் மீட்பர் உயிரோடுண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன்செல்கிறார்

காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே
ஆறுகளை நான் கடக்கும்போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை

மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன
பரிசுத்தரின் பின்னே செல்லுவேன்
திரும்பி நானும் பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பதில்லை

கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாருமில்லை
உனது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com